Developed by - Tamilosai
இன்று (31) வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிக வெப்ப நிலைமை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை’ மட்டத்திற்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வெப்பநிலையும் அதன் எச்சரிக்கை மட்டமும் –
27-38 : சாதாரணமானது
39-45 : எச்சரிக்கை மட்டம் – அதிக நேரம் வெட்ட வெளியில் நிற்றல் மற்றும் வேலைகளில் ஈடுபடுவதன் காரணமாக களைப்பு நிலை ஏற்படலாம். மேலும் வேலைகளில் ஈடுபடுவதன் மூலம் அதிக நீரிழப்பு காரணமான தசைப் பிடிப்பு (Heat Cramps) ஏற்படலாம்
46-52 : அதிக எச்சரிக்கை மட்டம் – அதிக நீரிழப்பு காரணமான தசைப் பிடிப்பு (Heat Cramps), வெப்ப அதிகரிப்பு காரணமான அதிக களைப்பு (Heat Exhaustion) ஏற்படலாம். மேலும் வேலைகளில் ஈடுபடுவதன் மூலம் உடலின் வெப்ப சமனிலை பேணல் நிறுத்தப்பட்டு உடல் செயலிழப்பு (Heat Stroke) நிலை ஏற்படலாம்
52 இலும் அதிகம் : அபாயம் – அதிக நீரிழப்பு காரணமான தசைப் பிடிப்பு (Heat Cramps), அதிக களைப்பு (Heat Exhaustion), மேலதிகமாக வேலைகளில் ஈடுபடுவதன் மூலம் உடலின் வெப்ப சமனிலை பேணல் நிறுத்தப்பட்டு உடல் செயலிழப்பு (Heat Stroke) நிலை ஏற்படலாம்.
(வளி மண்டலத்தில் நிலவும் வெப்பநிலையிலும் உடலால் உணரப்படும் வெப்ப நிலையின் அடிப்படையில் எதிர்வு கூறல்களின் அடிப்படையில் மேற்படி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது)
இது தொடர்பில் செயற்பட வேண்டிய விதம் –
வேலைத் தளத்தில்: தேவையான அளவில் நீரை பருகவும். முடியுமான வரை நிழல் உள்ள இடங்களில் ஓய்வெடுங்கள்.
வீட்டில்: வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பில் அவதானம் செலுத்துங்கள்
வாகனங்களில்: சிறுவர்களை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்லாதீர்கள்
வெட்ட வெளியில்: அதிகளவில் களைப்படையும் செயற்பாடுகளை குறைத்துக்கொள்ளுங்கள். நிழல் உள்ள இடங்களை நாடுங்கள். தேவைக்கேற்ப நீரை பருகுங்கள்.
ஆடை: இலகுரக மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுங்கள்.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 011-7446491 எனும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது அதிகபட்ச வெப்பநிலை தொடர்பான முன்னறிவிப்பு அல்ல எனவும், இது வளிமண்டலவியல் திணைக்களத்தால், அடுத்த நாளுக்கான உலகளாவிய எண்ணிக்கை சார்ந்த வானிலை முன்னறிவிப்பு மாதிரித் தரவைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.