தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வடக்கில் ஏன் இப்போதும் சோதனைச் சாவடிகள்?

0 112

 போர் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டு பலவருடங்கள் கடந்துள்ள நிலையிலும், இன்னமும் வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் சோதனைச்சாவடிகள் நிறுவப்பட்டிருக்கின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் மக்களின் பொதுவாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் முன்னெடுக்க வேண்டும்.

இதுவோர் ஜனநாயக நாடு என்பதையும் இங்கு ஜனநாயக நிர்வாகமே அமுலிலுள்ளது என்பதையும் வடக்கு மக்கள் உணரக்கூடியவகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

எதிர்வரும் ஆண்டிற்கான வரவு – செலவுத்திட்டத்தில் இழப்பீட்டுக்கான அலுவலகத்திற்கு போதியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என்றும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.