தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வடக்கின் 5 மாவட்ட செயலகங்களிலும் இரு ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள் நியமனம்

0 109

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்ட செயலகங்களிலும் தலா 2 ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்காக 5 மாவட்ட செயலகங்களிலிருந்தும் தலா இரண்டு உத்தியோகத்தர்களின் பெயர் விபரங்கள் ஆளுநரின் செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாகாணத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் காணப்படும் துறைசார் பிரச்சினைகளை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இருவரை மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா நியமிக்கவுள்ளார் என அறியமுடிகிறது.

அதன் ஊடாக உத்தியோகத்தர்கள் தமது மாவட்டத்திலுள்ள பிரச்சினைகளை உடனடியாகவே அறிக்கையிட முடியும் என ஆளுநர் எதிர்பார்த்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.