Developed by - Tamilosai
பிரதமர் அலுவலகத்தில் நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளின் தலைவர்கள், உயர்மட்ட முகாமைத்துவ அதிகாரிகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சேமிப்பு, டொலர் பற்றாக்குறை , கடன் விரிவாக்கம், போன்ற விடயங்கள் குறித்தும், நாட்டின் வங்கியியல் அமைப்பு தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் பிரதமர் விரிவாக கேட்டறிந்து கொண்டுள்ளார்.
கடன்களைத் திருப்பிச் செலுத்த நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் வழங்கப்பட்ட சலுகைக் காலத்தை நீட்டிப்பது குறித்தும் இச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. மத்திய வங்கியின் பூரண கண்காணிப்பின் கீழ் சமுர்த்தி வங்கி முறையை கொண்டு வருமாறும் பிரதமர் தெரிவித்துள்ளார்.