Developed by - Tamilosai
எல்பிட்டிய, மாபலகம வீதியின் காந்தகஹ சந்தியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தில் 30 மற்றும் 35 வயதுடைய இருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துச் சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.