தமிழ் ஓசை
தமிழ் ஓசை

லிபியாவில் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

0 48

லிபியாவின் கிழக்கு நகரான டர்னாவில் நூற்றுக்கணக்கான மக்கள் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

அண்மையில் டர்னாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பான உடனடியாக விசாரணைகளை நடத்தி பொறுப்புக்கூற வேண்டிய தலைவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

நகரின் நிதி தொடர்பாக விசாரணை நடத்துவது மற்றும் நகரத்தை மீண்டும் கட்டியெழுப்ப நிதி வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆர்ப்பாட்டகார்கள் தமக்கு இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் என கோரியுள்ளனர்.

டேனியல் புயல் தொடர்பில் முன்னறிவிப்பு செய்து, வீடுகளில் இருந்த மக்களை அப்புறப்படுத்தி இருந்தால், வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளை தவிர்த்திருக்க முடியும் மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் டர்னா நகர முதல்வர் அப்துல்மேனம் அல் கயிதியின் வீட்டுக்கு தீ வைத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.