Developed by - Tamilosai
எரிவாயு சிலிண்டர்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை துரிதப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
அனைத்து எரிவாயு சிலிண்டர்களும் முறையாக பரிசோதிக்கப்படுவதையும் சிலிண்டர்களை பராமரிப்பதில் ஏற்படும் தாமதத்தை தடுப்பதற்காகவும் தேவையான தொழில்நுட்ப உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளையும் நிறுவனம் செய்துள்ளதாக அறிக்கை ஓன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களில் 180,000 எரிவாயு சிலிண்டர்களை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும்
அதேபோல் தினசரி நிரப்புதல் மற்றும் விநியோகம் 24 மணி நேரமும் முன்னெடுக்கப்படுவதால் எதிர்காலத்தில் எவ்வித தாமதமும் இன்றி சந்தைக்கு எரிவாயுவை வழங்க முடியும் என Litro நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.