தமிழ் ஓசை
தமிழ் ஓசை

லிட்ரோ காஸ் விலையில் மாற்றம் இல்லை

0 84

திரவ பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர்களின் விலை இன்று (ஆகஸ்ட் 04) அதிகரிக்கப்படாது என லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பீரிஸ், உலக சந்தையில் விலையேற்றம் காணப்பட்ட போதிலும் அதன் உள்நாட்டு எரிவாயுவின் விலை திருத்தப்பட மாட்டாது.

உலக சந்தையில் நிலவும் விலையை கருத்தில் கொண்டு மாதாந்திர விலை சூத்திரத்தின் படி உள்நாட்டு எரிவாயு விலைகள் திருத்தப்படும் என லிட்ரோ காஸ் நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது.

உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயு 85 அமெரிக்க டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளதால் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என முதித பீரிஸ் இதன்போது தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தற்போதைய விலையே அமுல்படுத்தப்படும் அதேவேளை, அத்தகைய விலையேற்றம் அமுல்படுத்தப்படாது என லிட்ரோ காஸ் தலைவர் இன்று அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.