Developed by - Tamilosai
உலகின் முன்னணி நாடுகள் பாரியளவில் வர்த்தக நடவடிக்கைகள் ஊடாகப் பெறப்படும் இலாபத்தில் 15 சதவீதத்தை வரியாகச் செலுத்த இணக்கம் தெரிவித்துள்ளன.
உலக பொருளாதாரத்தில் முன்னணியிலுள்ள 20 நாடுகளின் தலைவர்களும் இதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் இலாபத்தை குறைந்த வரி அதிகார வரம்புகள் மூலம் திருப்பிக் கொள்கின்றன என்ற கவலைகளுக்கு மத்தியில் 20 நாடுகளின் தலைவர்கள் இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளனர்.
ரோமில் நடைபெறும் ஜி 20 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட சகல தலைவர்களும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டனர்.
இந்த மாநாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் காலநிலை மாற்றம் என்பன குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜி 20 மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அமெரிக்கா, ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுளின் தலைவர்களுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது, ஜி 20 நாடுகளில் இல்லாத ஈரானின் அணு ஆயுத நடவடிக்கைகள்குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது.