Developed by - Tamilosai
தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு லங்கா IOC நிறுவனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதன் நிர்வாக இயக்குநர் மனோஜ் குப்தா இதனைத் தெரிவித்துள்ளார்.
பெற்றோல் விலையை லீற்றருக்கு 20 ரூபாயும், டீசலின் விலையை லீற்றருக்கு 30 ரூபாயும் உயர்த்த அரசாங்கத்தின் அனுமதியை எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, எரிபொருள் விலையை அதிகரிக்க எதிர்பார்க்கவில்லை என அரசாங்கம் தமக்கு அறிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.