Developed by - Tamilosai
றம்புக்கணையில் நேற்று (19) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரம்புக்கன பிரதேசத்தில் இருந்து வெளியாகும் பயங்கரமான செய்தியால் தாம் மிகுந்த மனவேதனை அடைந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்து வகையான வன்முறைகளையும் வன்மையாகக் கண்டிப்பதாகவும், மேலும் கட்டுப்பாட்டையும் அமைதியையும் கடைப்பிடிக்குமாறு காவல்துறை மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் வெளிப்படையான மற்றும் நியாயமான விசாரணைகளை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுத்தருவது அனைத்து தரப்பினரின் பொறுப்பாகும் என அமெரிக்க தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.