Developed by - Tamilosai
இலங்கை வம்சாவழியைச் சேர்ந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இந்தியாவை விட்டு வெளியேற குடிவரவு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், துபாயில் நடக்கவுள்ள இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார், ஆனால் குடிவரவு அதிகாரிகள் அவரை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரூ.2 ஆயிரம் கோடி பணமோசடி வழக்கு தொடர்பான காவல்துறை விசாரணையில் ஜாக்குலின் பெர்னாண்டஸின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.