Developed by - Tamilosai
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்து வெளியான படம் ‘சர்தார்’. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்திருந்தார். மேலும், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
‘சர்தார்’ திரைப்படம் அக்டோபர் மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இப்படம் ரூ.100 கோடி வரை வசூல் குவித்தது. இந்நிலையில், ‘சர்தார்’ படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் ரூ.30,000 மதிப்புள்ள சில்வர் வாட்டர் பாட்டிலை நடிகர் கார்த்தி வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.