Developed by - Tamilosai
மத்திய வங்கியின் அறிக்கையில் இலங்கை நாணயமான ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியுற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி தொடக்கம் ஜூன் இரண்டாம் வாரம் வரையான காலப்பகுதிக்குள் ரூபாவின் பெறுமதி 44.3 வீதத்தினால் பாரிய வீழ்ச்சியை எதிர்கொண்டிருந்தது.
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக அமெரிக்க டொலர் மட்டுமன்றி ஆஸ்திரேலிய டொலர், யூரோ, இந்திய ரூபா, ஜப்பானிய யென் என்பவற்றின் ரூபாவுக்கு எதிரான பெறுமதி கணிசமான அளவில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது