Developed by - Tamilosai
நாவலப்பிட்டி – ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் ருவான்புர பகுதியில் இன்று பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் அவ்வீதியூடான போக்குவரத்து முற்றாக முடங்கியது.
இப்பகுதியில் மேலும் சில சரிவுகள் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதால் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மண்சரிவை அகற்றி இயல்பு நிலை திரும்பும் வரை நாவலப்பிட்டியிலிருந்து ஹப்புகஸ்தலாவ மற்றும் கொத்மலை, பூண்டுலோயா, திஸ்பனை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் மாற்று வழியைப் பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.