Developed by - Tamilosai
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் கடுமையான நிபந்தனைகளின் கீழ் உயர் நீதிமன்றத்தால் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பாக ஏப்ரல் மாதம் கைதான ரியாஜ் பதியுதீனுக்குப் பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே அவரைக் கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.