தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ராஜபக்ச குடும்பம் ஆட்சியில் இருக்கும் வரை இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது- விஜேதாச ராஜபக்ஷ

0 429

ராஜபக்ச குடும்பம் ஆட்சியில் இருக்கும் வரை இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது என்பது மக்களுக்கு தெரியும் என அரச தலைவர் சட்டத்தரணி கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜபக்ஷ, அவசரகாலச் சட்டத்தின் போது ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படக் கூடாது, மாறாக மக்கள் ஏன் போராட்டங்களை நடத்துகிறார்கள் என்பது குறித்து அரசாங்கம் ஆராய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கடந்த 73 வருடங்களில் இது போன்ற அவல நிலைக்கு நாடு வீழ்ந்திருக்கவில்லை என சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், உணவு, எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இன்றி மக்கள் மேலும் அவநம்பிக்கை அடைந்துள்ளனர் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.