Developed by - Tamilosai
ரஷ்யப் படைகள் செச்சின்யா போரில் சந்தித்த இழப்புகளை விட உக்ரைன் நாட்டின் மீதான தற்போதைய படையெடுப்பில் மிக அதிகமான இழப்புகளைச் சந்தித்ததாகவும் இந்தப் போரின் மூலம் ஒன்றையும் சாதிக்க முடியாது என்பதையும் ரஷ்ய படை உணரத் தொடங்கியுள்ளது என்றும் உக்ரைன் அதிபர் தனது இரவு தொலைக்காட்சி உரையின் போது தெரிவித்துள்ளார்.
“ரஷ்ய படைவீரர்கள் உயிர் வாழ விரும்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். மேலும், சரணடைபவர்கள், கண்ணியமாக நடத்தப்படுவீர்கள்,” என்று கூறியுள்ளார்.
ரஷ்ய அரசு தொலைக்காட்சியில், ஒளிபரப்பின்போது மெரினா ஓவ்சியனிகோவா என்ற பெண், போர் வேண்டாம் என்ற பதாகையை திரையில் காட்டியுள்ளார். அவருக்கு தனது மரியாதையை தெரிவித்துக் கொள்வதாக ஸெலென்ஸ்கி கூறினார்.
மேலும், “உண்மையை வெளிப்படுத்தும் முயற்சியை எடுக்கும் ரஷ்யர்களுக்கு நன்றி மற்றும் தவறான தகவல்களை எதிர்த்து நீங்கள் போராடுகிறீர்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.