Developed by - Tamilosai
ரஷ்ய – உக்ரைன் யுத்த நிறுத்தம் அவசியமான ஒன்று என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டேரஸ் தெரிவித்துள்ளார்.
மூன்றாம் உலகமகா யுத்தம் வெடிப்பதற்கான ஆபத்துக்கள் காணப்படுவதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் எச்சரித்திருந்த நிலையில், இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்ய வேண்டும் என அன்டனியோ குட்டேரஸ் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யாவிற்கு எதிரான யுத்தத்தை மேற்கொள்ளும் வகையில் நேட்டோ அமைப்பு உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கிவருவதாக குற்றம் சாட்டியுள்ள ரஷ்ய வெளிவவகார அமைச்சர் செர்ஜி லவ்ரோ, மூன்றாம் உலகமகா யுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் ரஷ்யாவிற்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டேரஸ், ரஷ்ய வெளிவிவகார அமைச்சரை சந்தித்து, யுத்தம் நிறுத்தப்படுவதற்கு சாத்தியமான விடயங்களை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
எனினும் மேற்கலக நாடுகளால் பரந்த அளவில் உலகமகா யுத்தம் ஏற்படும் என எச்சரிப்பது முட்டாள்தனமான கருத்து என பிரித்தானியாவின் ஆயுதப்படை அமைச்சர் ஜேம்ஸ் ஹீப்பி தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரஷ்ய வெளிவிவகார அமைச்சரின் உலகமகா யுத்தம் தொடர்பான கருத்து உலக நாடுகள் உக்ரைனுக்கு உதவுவதை அச்சுறுத்தும் வகையில் கூறப்பட்டது என உக்ரைனிய வெளிவவகார அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறியுள்ளார்.