Developed by - Tamilosai
ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் உலகளாவிய உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்கக்கூடும் என ரஷ்ய அதிபர் புடின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது போரை தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு நாடுகளும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், பன்னாட்டு நிறுவனங்கள் பல ரஷ்யாவில் தங்களின் வர்த்தகம் மற்றும் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.
இதுகுறித்து புடின் காணொளி மூலம் நடத்தப்பட்ட அரசாங்க கூட்டத்தில், “ரஷ்யா மற்றும் பெலாராஸ் நாடுகள், உலக அளவில் அதிகளவு கனிம உரங்களை உற்பத்தி செய்து வருகிறோம்.
எங்கள் பொருட்களை வழங்குவதற்கான நிதி மற்றும் தளபாடங்களுக்கு அவர்கள் தொடர்ந்து சிக்கல்களை உருவாக்கினால் அதன் விலைகள் உயரும், இது இறுதி தயாரிப்பான உணவுப் பொருட்களை கடுமையாக பாதிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.