தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் படையெடுக்கலாம் -அமெரிக்கா

0 247

உக்ரேன் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் படையெடுக்கலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்னியாயில், 48 மணி நேரத்துக்குள் உக்ரேனில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேற வேண்டும் என்றும் வேறு சில நாடுகளும் தங்கள் நாட்டவர்கள் உக்ரேனில் இருந்து வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளன.

உக்ரேன் உடனான எல்லையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

ரஷ்யா உக்ரேன் மீது படையெடுக்க திட்டமிட்டுள்ளதாக மேற்குலக நாடுகள் கூறுகின்ற போதிலும் ஆனால் அதை ரஷ்யா மறுப்பதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பதற்ற நிலை மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு வாழ்கின்ற நியுசிலாந்து மற்றும் ஐரோப்பிய சங்க ஊழியர்ப்படை உறுப்பினர்களுக்கும் உடனடியாக வெளியேறுமாறு குறித்த நாடுகளிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரேனில் வாழ்கின்ற நியுசிலாந்து மக்களுக்கு உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு நியுசிலாந்து வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது. அமெரிக்க ராஜாங்க செயலாளர் என்டனி இப்லிங்கன் தமது மக்களுக்கு உடனடியாக யுக்ரேனிலிருந்து வெளியேறுமாறு நேற்று விடுத்த அறிவித்தலைத் தொடர்ந்தே நியுசிலாந்தும் இதற்கான அறிவித்தலை வெளியிட்டது.

Leave A Reply

Your email address will not be published.