Developed by - Tamilosai
ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்தவும், சமரச பேச்சில் ஈடுபடவும் போப் பிரான்சிஸ் மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.
போப் பிரான்சிஸ் வேண்டுகோளை ரஷியா ஏற்கவில்லை.
இதையடுத்து போப் பிரான்சிஸ் போரை உடனடியாக நிறுத்துமாறு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள கருத்துக்கள் வருமாறு:-
போரினால் குழந்தைகள் பலியாவதை ஒருபோதும் ஏற்க முடியாது. குழந்தைகளின் எதிர்காலம், அவர்களின் பெற்றோர் பலியானால், குழந்தைகள் அனாதைகளாகும் நிலை, ஆகியவற்றை பற்றி சிந்தியுங்கள்.
இந்த சிந்தனை உருவானால் போர் நிறுத்தத்திற்கு வழிபிறக்கும். எனவே கடவுளின் பெயரால் போரை நிறுத்துங்கள். அதற்கான ஏற்பாடுகளை தொடங்குகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.