Developed by - Tamilosai
உக்ரைனில் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தங்கள் நாட்டில் ரஷ்யா இனப்படுகொலை நடத்தி வருவதாக குற்றஞ்சாட்டிய உக்ரைன், போரை உடனடியாக நிறுத்த உத்தரவிடக்கோரி சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக நெதர்லாந்தை தலைமையிடமாக கொண்ட சர்வதேச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், இந்த விசாரணையை தொடர்ந்து உக்ரைன் மீது நடத்திவரும் இராணுவ நடவடிக்கையை ரஷ்யா உடனடியாக நிறுத்தவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் தற்போது அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சர்வதேச நீதிமன்றின் இந்த உத்தரவை தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.