தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ரஷ்யாவுக்கு அமெரிக்கா கண்டனம்! ஜி7 நாடுகளின் அவசர கூட்டத்துக்கும் ஏற்பாடு!!

0 384

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது போர் தொடுக்க நினைக்கும் ரஷியா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசர கூட்டம் இரண்டாவது முறையாக இன்று தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், உக்ரைன் மீது போர் தொடுக்க நினைக்கும் ரஷியா மீது நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இதற்கிடையே இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் அதே வேளையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைன் மீது போர் தொடுக்க ராணுவ படைகளுக்கு ஆணை பிறப்பித்து அதிர்ச்சியளித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருப்பதாவது:-

அதிபர் புடின் பேரழிவு விளைவிக்கக்கூடிய மற்றும் மனித இனத்திற்கு துன்பத்தை கொண்டு வரும் திட்டமிடப்பட்ட போரை தேர்ந்தெடுத்துள்ளார்.

உக்ரைன் மக்ளுக்காக ஒட்டுமொத்த உலகமும் பிரார்த்தனை செய்து வருகிறது. அந்நாட்டு மக்கள் ரஷ்ய இராணுவப் படைகளால் நியாயமற்ற தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

இந்த தாக்குதலால் ஏற்படும் மரணம் மற்றும் அழிவுக்கு ரஷ்யா மட்டுமே பொறுப்பு. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஒன்றுபட்ட மற்றும் தீர்க்கமான முறையில் பதிலளிப்பார்கள். உலகம் ரஷ்யாவை பொறுப்புக்கூற வைக்கும்.

நான் வெள்ளை மாளிகையில் இருந்து நிலைமையை கண்காணித்து வருகிறேன். தேசிய பாதுகாப்பு குழுவிடமிருந்து வரும் தகவல்களைப் பெற்று வருகிறேன்.

உக்ரைன் விவகாரம் தொடர்பாக நாளை காலை ஜி7 அமைப்பு தலைவர்களுடன் சந்திப்பு நிகழ உள்ளது. நாங்கள் நேட்டோ நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.

Leave A Reply

Your email address will not be published.