Developed by - Tamilosai
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ரஷ்யாவின் பாதுகாப்புச் சபை செயலாளர் நிக்கொலாய் பட்ருஷெவுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான இருதரப்புத் தொடர்புகளுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதியுடன் 65 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
இந்தநிலையில், ரஷ்யாவின் பாதுகாப்புச் சபை செயலாளரின் இந்த விஜயத்தின் ஊடாக இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகள் மேலும் பலப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 பரவலுக்கு மத்தியிலும், ரஷ்ய பிரஜைகள் இலங்கைக்கான சுற்றுலா மேற்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தடுப்பூசிகளை வழங்கியமைக்கும் நன்றி தெரிவித்தார்.