தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ரஷ்யாவிடம் அமைதி பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என மீண்டும் வேண்டுகோள்-உக்ரைன் அதிபர்

0 451

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவிடம் அமைதி பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, நேற்று இரவு தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் ஜெலன்ஸ்கி, அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும்.

அதே நேரம், அமைதிக்காக உக்ரைன் தனது எந்த ஒரு பகுதியையும் விட்டுக்கொடுக்க ஒப்புக்கொள்ளாது என உறுதியாக தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் கடுமையான தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. ரஷ்யாவிற்கு இந்தப் போர் பல்லாயிரக்கணக்கான வீரர்களின் இழப்பைக் கொடுத்துள்ளது.

உக்ரைன் போரில் ரஷ்யா கிட்டத்தட்ட 02 இலட்சம் வீரர்களை களமிறக்கியுள்ளது. அவர்களில் 15 ஆயிரம் பேர் வரையில் இந்தப் போரில் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  

Leave A Reply

Your email address will not be published.