தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ரஷ்யாவால் கொல்லப்பட்ட முதல் வெளிநாட்டு ஊடகவியலாளர்

0 470

உக்ரைனின் கிவ் நகருக்கு வெளியே உள்ள இர்பின் நகரில் 50 வயதுடைய அமெரிக்க ஊடகவியலாளர் பிரெண்ட் ரெனோட் என்பவர் ரஷ்ய படையினரால் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார். இவர் முன்னர் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் பணி புரிந்தவர் ஆகும்.

கிவ் நகர காவல் துறை அதிகாரி அன்ரி நியூடோவ் தெரிவிக்கையில், இவருடன் சேர்த்து மேலும் இரு ஊடகவியாளர்கள் ரஷ்ய படைகளால் இலக்குவைத்து தாக்கப்பட்டதாகவும் அதில் பிரெண்ட் ரெனோட் கொல்லப்பட்டதாகவும் மற்றய இருவரும் மருத்துவமணையில் அனுமதிக்கப்படு உள்ளதாக தெரிவித்தார்.

இதுவரை வெளியான தகவலின் படி இவ்வாறு உக்ரைனில் கொல்லப்படும் சர்வதேச ஊடவியலாளர் இவராகும்.

Leave A Reply

Your email address will not be published.