தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ரம்புக்கணையில் ரயில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது பொலிஸார் கண்ணிப்புகை தாக்குதல்

0 440

ரம்புக்கணையில் ரயில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது பொலிஸார் கண்ணிப்புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் சுமார் 15 மணித்தியாலங்கள் இவ்வாறு ரயில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் இவ்வாறு கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியினரால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக துன்முல்ல சந்தியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல், எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக ராஜகிரிய – பத்தரமுல்லை பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.