Developed by - Tamilosai
ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (16) கம்பஹா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது வெலிவேரியவில் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு பிரிகேடியர் அருண தேசப்பிரிய குணவர்தன உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் குழுவொன்று வருகை தந்ததாக கம்பஹா பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் நிலந்த பெரேரா சாட்சியமளித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை 10 நிமிடங்களில் அங்கிருந்து வெளியேறுமாறு கூறி, அருகிலிருந்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குச் சென்றதாகவும், அதன்பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கப்பட்டுள்ளனர் என்றும் சாட்சியாளர் கூறினார்.
2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் இராணுவ பிரிகேடியர் அருண தேசப்பிரிய குணவர்தன உள்ளிட்ட சந்தேக நபர்களும் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
இராணுவ அதிகாரிகளும் தடிகளால் ஆர்ப்பாட்டகாரர்களை தாக்கியதாக சாட்சியாளர் மேலும் கூறினார்.
பின்னர் அச்சம் காரணமாக அங்கிருந்து தப்பிச் சென்றதாக கம்பஹா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் நிலந்த பெரேரா தெரிவித்தார்.
மேலதிக சாட்சிய விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளன.