Developed by - Tamilosai
மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவுக்கான இரங்கல் பிரேரணை மீதான விவாதத்தின் போது, நாட்டுக்கு பாதகமான விடயங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டதாலேயே நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்த கருத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கண்டனம் தெரிவித்தார்.
நான் ஒருபோதும் வன்முறையை ஆதரித்ததில்லை ஊக்குவித்ததில்லை அல்லது வன்முறையை தூண்டக்கூடிய சிந்தனைகளிற்கு ஆதரவளித்ததில்லை.
அமைதி ஐக்கியம் அனைவரையும் உள்ளடக்குதல் ஆகியவற்றை வலியுறுத்தி வரும் அதேவேளை மக்களின் தேவைகள் அபிலாசைகள் குறித்து நான் குரல்கொடுத்து வருகின்றேன்.
தாங்கள் தெரிவு செய்த பிரதிநிதிகள் தங்கள் தேவைகளை துயரங்களை அபிலாசைகளை கருத்தில் எடுக்க தவறிவிட்டனர் என கருதியதன் காரணமாகவே மக்கள் வன்முறையில் ஈடுபட்டனர் என்றே நான் தெரிவித்தேன் நான் வன்முறைகளிற்கு ஆதரவளிக்கின்றேன் என்ற விதத்தில் எனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது, தவறாக அர்த்தப்பட்டுள்ளது” என சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.