Developed by - Tamilosai
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு, பொது மன்னிப்பு வழங்குவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ரஞ்ஜன் ராமநாயக்க, சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றார்.
இந்த நிலையில், ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதன்படி, சுதந்திர தினத்தை முன்னிட்டு ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து தற்போது ஆராயப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.