Developed by - Tamilosai
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் நேற்று ஜெனிவாவில் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பமானது.
இந்த கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விவாதம் நாளை மறுதினம் (03) நடைபெறவுள்ளது.
இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பான விடயங்களை முன்வைப்பதற்காக, எதிர்க்கட்சி உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் ஜெனிவா சென்றுள்ளனர்.
நீதித்துறையை அவமதித்தார் எனும் குற்றத்துக்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க