தமிழ் ஓசை
தமிழ் ஓசை

யொஹானி டி சில்வாவிற்கு – நாடாளுமன்றில் விசேட கௌரவிப்பு நிகழ்வு

0 150

“மெனிகே மகே ஹித்தே” புகழ் பிரபல பாடகி யொஹானி டி சில்வாவிற்கு எதிர்வரும் 23ம் திகதி நாடாளுமன்றில் விசேட கௌரவிப்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கௌரவிப்பு நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒன்றியத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யொஹானி சபாநாயகர் கலரிக்கு அழைத்து வரப்படுவார் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு வாழ்த்துரைப்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற விழா மண்டபத்தில் யொஹானிக்கு விசேட கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் குசானி ரோஹனதீர ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

யொஹானியின் மெனிகே மகே ஹித்தே பாடல் உலகம் முழுவதிலும் பெரும் வரவேற்பை பெற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.  

Leave A Reply

Your email address will not be published.