Developed by - Tamilosai
யுபுன் அபேகோன் இலங்கை மற்றும் தெற்காசியவில் ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தனது சாதனையை புதுப்பித்துள்ளார்.
ஜெர்மனியில் நடைபெறும் மெய்வல்லுநர் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் போட்டி தூரத்தை 10.06 செக்கன்களில் கடந்து புதிய சாதனையை படைத்துள்ளார்.
கடந்த வருடம் இதே போட்டியில் கலந்துகொண்டு 100 மீட்டர் தூரத்தை 10.09 செக்கனில் கடந்து சாதனை படைத்திருந்தார்.
60 மீட்டர், 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் தெற்காசிய சாதனை மற்றும் 150 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஆசிய சாதனையை இதுவரை தம்வசப்படுத்தியுள்ளர்