Developed by - Tamilosai
கெரவலப்பிட்டி – யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் விசாரிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் உயர்நீதிமன்றத்திடம் சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்படி, குறித்த மனு இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் பர்ஷான ஜமீலினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
கெரவலப்பிட்டிய – யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவது தொடர்பான அமைச்சரவையின் தீர்மானத்தைச் சவாலுக்கு உட்படுத்தும் வகையில் மனுக் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் எல்லே குணவங்ச தேரர் ஆகியோர் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
அதன் பின்னர், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவால் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.