Developed by - Tamilosai
கெரவலப்பிட்டிய யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவது தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தைச் சவாலுக்கு உட்படுத்தும் வகையில் மேலுமொரு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவால் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த விடயம் தொடர்பாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் எல்லே குணவங்ச தேரர் ஆகியோர் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.