Developed by - Tamilosai
வல்வெட்டித்துறை பகுதியில் இருந்து கடற்றொழிலிலுக்குச் சென்ற மீனவர்கள் இருவரைக் காணவில்லை என வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது
நேற்றைய தினம் காலை வல்வெட்டித்துறையில் இருந்து கடற்றொழிலுக்காக ஒரு படகில் இரு மீனவர்கள் சென்றுள்ள நிலையில் நேற்று மாலை வரை கரை திரும்பவில்லை என்று கூறப்படுகின்றது. இருவரையும் தேடும் பணிகள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சுந்தரலிங்கம் கெங்காரூபன் என்ற 37 வயதுடையவரும் தவராசா சுதர்சன் என்ற 41வயதுடையவருமே காணாமல் போயுள்ளனர்.