Developed by - Tamilosai
நேற்று (04) மாலை 05.30 மணியளவில் யாழ்ப்பாணம் வலிகாமம் சிறுப்பிட்டியின் சந்திக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிளும் காரொன்றும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 03 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் முற்றாக சேதமாகியுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.