தமிழ் ஓசை
தமிழ் ஓசை

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி. நல்லை ஆதீன குரு முதல்வரை சந்தித்தார் !

0 204

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவ கட்டளைத் தளபதி இன்றைய தினம்

மரியாதை நிமித்தம் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

நல்லை ஆதினத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் செய்த யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியை நல்லை ஆதீன குருமுதல்வர் பொன்னாடை போர்த்தி வரவேற்றதோடு

இராணுவ தளபதியினால் நல்லை ஆதீன குருமுதல்வருக்கு நினைவு பரிசும் கையளிக்கப்பட்டது.

குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த நல்லை ஆதீன குரு முதல்வர்இ

புதிதாக யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியாக பதவி ஏற்றுள்ள என்னை இன்று மரியாதை நிமித்தம் சந்தித்தார்

அவர் புத்தாண்டுக்காக என்னை வந்து சந்திப்பதாக தெரிவித்திருந்தார்.

தற்போதைய யாழ் மாவட் நிலை தொடர்பில் விளக்கமாக கேட்டறிந்து கொண்டதோடு

அண்மையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்து விக்கிரகங்கள் திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இந்துஆலயங்களில் விக்கிரகங்கள் திருடப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் கோரியுள்ளேன்

அத்துடன் எதிர்வரும் தைப்பொங்கல் உற்சவத்தினை இந்து மக்கள் அனைவரும் சுதந்திரமாக கொண்டாடு வதற்குரிய நடவடிக்கையை முன்னெடுக்கு மாறும்

குறிப்பாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று பொதுமக்கள் தமது வழிபாடுகளையும் மேற்கொள்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து தருமாறும்

எதிர்வரும் புத்தாண்டு நிகழ்வினை பொது மக்கள் சுதந்திரமாக கொண்டாடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும்

தற்போதைய நிலையில் இனங்களுக்கிடையில் விரிசல் ஏற்படுகின்ற நிலை காணப்படுகின்றதுஇ

அதனை நிறுத்துவதற்கு தங்களாலான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் இன்றைய சந்திப்பின் போது நான் எடுத்துரைத்தேன்இ

அதற்கு பதில் அளித்த இராணுவ கட்டளைத் தளபதி இவை தொடர்பில் தான் உரிய நடவடிக்கையை சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி எடுப்பதாகவும் தெரிவித்தார்.

என்றார் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்.

Leave A Reply

Your email address will not be published.