Developed by - Tamilosai
யாழ்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி போலீஸ் பிரிவிற்குட்பட்டு கட்டைக்காடு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கரை ஒதுங்கியுள்ளது.
அண்மையில் வடமராட்சி கிழக்கு மணல்காடு, வல்வெட்டித்துறை, ஆகிய பகுதியில் சடலங்கள் கரையொதுங்கியிருந்த நிலையில் மேலும் ஒரு சடலம் கரை ஒதுங்கியுள்ளது
ஒரு கிழமைக்குள் யாழ் மாவட்டத்தில் கரையொதுங்கிய நான்காவது சடலம் என்பது குறிப்பிடத்தக்கது.