தமிழ் ஓசை
தமிழ் ஓசை

யாழ். மாநகர சபை பசளைக்கு கேள்வி அதிகரிப்பு

0 55

 யாழ்ப்பாணம் மாநகர சபை மீள் சுழற்சி மையத்தில் உருவாக்கப்படும் சேதனப் பசளைக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக  மாநகர சபையின் ஆணையாளர் இ.த. ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.


சேதனப் பசளை உற்பத்தி என்பது யாழ்ப்பாணம் மாநகர சபையின் மீள் சுழற்சி தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

மிகவும் அண்மைக்காலமாக சேதனப்  பசளைக்கு கேள்வி அதிகமாகக் காணப்படுவதன் காரணமாக சேதனப் பசளை உற்பத்தியை நாம் அதிகரித்துள்ளோம்.

அண்மைய காலங்களில் மாதத்திற்கு 25 ஆயிரம் தொடக்கம் 30 ஆயிரம் கிலோ சேதனப் பசளை உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது.

‘வீரியம்’ என்ற பெயரில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்குச் சொந்தமான மீள் சுழற்சி மையத்தில் சேதனப்  பசளை உற்பத்தி செய்யப்பட்டு ஒரு கிலோ 20 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது.

தற்போது எமது சேதனப் பசளையை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெரும்பாலானோர் ஆர்வத்துடன் பெற்றுக் கொள்கின்றார்கள்.


 ஆர்வமுள்ளவர்கள் மாநகர சபை மீள் சுழற்சி மையத்தில் உருவாக்கப்படும் சேதனப் பசளையை மீள் சுழற்சி மையத்திலும் மற்றும் ஏனைய திரட்டு அலுவலங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.