தமிழ் ஓசை
தமிழ் ஓசை

யாழ்.மாதகலில் கடற்படைக்கு காணி அபகரிக்கும் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு.

0 182

யாழ்.மாதகல் கிழக்கில் கடற்படையினரின் தேவைக்காக பொதுமக்களின் காணியை சுவீகரிப்பதற்காக அளவீடு செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி பொதுமக்கள், அரசியல்வாதிகள், காணி உரிமையாளர்கள் எதிர்ப்பால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கின்றது. 

மாதகல் கிழக்கு ஜெ 150 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 3 பரப்பு காணி கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்புக்காக அளவீட்டு பணிகள் இன்று காலை நில அளவை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவிருந்தது.

அளவீட்டு பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக குறித்த இடங்களில் ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தள்ளனர்.

தொடர்ந்து, காணி அளவீட்டு நடவடிக்கைகளை தற்காலிகமாக கைவிட்டு நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் அவ்விடத்தில் இருந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.