Developed by - Tamilosai
யாழ் மாகரசபை வரவுசெலவுத்திட்டம் 3 மேலதீகவாக்குகளால் வெற்றியடைந்துள்ளது
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. 2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாத்த்திற்கு விடப்பட்டது.
இதன் இறுதியில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் வாக்கெடுப்பிற்கு ஆதரவாக த.தே.ம.முன்னணியின் மணி அணையை சேர்ந்த 10 உறுப்பினர்களும் ஈ.பீ.டீ.பியை சேர்ந்த 11 உறுப்பினர்களுடன் சுதந்திரக் கட்சியை சேர்ந்த இரண்டு உறுப்பினர்களோடு ஐ.தே.க, கூட்டணியை சேர்ந்த 24 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
இதேநேரம் த.தே.கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களுடன் த.தே.ம.முன்னணியின் கஜேந்திரன் அணியைச் சேர்ந்த 3 உறுப்பினர்கள், ஐ.தே.கட்சியை சேர்ந்த 2 உறுப்பினர்களும் 21 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.
இதற்கமை யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டது.