தமிழ் ஓசை
தமிழ் ஓசை

யாழ்.நகரில் முகக்கவசம் அணியாது நடமாடிய 25 பேர் கைது!

0 114

யாழ். நகரில் முகக்கவசம் அணியாத 25 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு எச்சரிக்கை செய்யப் பட்டபின் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

யாழ்ப்பாணம் நகரில் தற்பொழுது பண்டிகைக் காலம் என்பதால் பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடியுள்ள நிலையில்  நேற்றுச் (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான அணியினர் வீதிச் சோதனை நடவடிக்கையை  முன்னெடுத்த போது, யாழ்ப்பாணம் நகரின் முக்கிய வீதிகளில் முகக்கவசம் அணியாது  நடமாடிய 25 பேர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

குறித்த நடவடிக்கை தொடர்ச்சியாக எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.