தமிழ் ஓசை
தமிழ் ஓசை

யாழ்.தென்மராட்சியில் கொரோனா உச்சம் தொடும் தொற்றாளர்கள்

0 242

தென்மராட்சி பகுதியில் கொரோனா பரவல் மிகத் தீவிரமாக அதிகரித்து வருவதுடன், கடந்த 16 நாட்களில் மாத்திரம் 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 04 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், நாளாந்தம் சராசரியாக 8 முதல் 10 கொரோனா நோயாளர்கள் என்றளவில் எண்ணிக்கை உயரத் தொடங்கிவிட்டதாகவும் சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது.

சுகாதார நடைமுறைகளை மக்கள் இறுக்கமாகப் பின்பற்றாமை காரணமாக சமூகத்தில் தொற்று தீவிரமாகப் பரவியிருப்பதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.