தமிழ் ஓசை
தமிழ் ஓசை

யாழ். துன்னாலையில் இராணுவத்தினரால் ஒருவர் கைது!

0 184

யாழ்பணம் துன்னாலை பகுதியில் ஐஸ் மற்றும் கஞ்சா போதைப் பொருளுடன்  நேற்று ( செவ்வாய்க்கிழமை) இராணுவத்தினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துன்னாலைப் பகுதியில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த இடத்துக்கு விரைந்த இராணுவத்தினர் சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன் , அவரிடமிருந்து ஒரு தொகை போதை பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் , அவரிடமிருந்து மீட்கப்பட்ட போதை பொருளையும்  நெல்லியடி பொலிஸாரிடம், இராணுவத்தினரால் ஒப்படைக்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.