தமிழ் ஓசை
தமிழ் ஓசை

யாழ். எம்.ஜி.ஆர். காலமானார்!

0 181

யாழ்.எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் இராசையா சுந்தரலிங்கம் இன்று வியாழக்கிழமை அதிகாலை காலமானார்.

கோப்பாய் தெற்கு மாதா கோவிலடியைச் சேர்ந்த இராசையா சுந்தரலிங்கம்  தமிழக முன்னாள் முதலமைச்சர்  எம்.ஜி.இராமசந்திரனின் தீவிர ரசிகனாவார். அத்துடன் அ.தி.மு.கவின் தீவிர விசுவாசியும் ஆவார். தமிழகம் சென்று எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்தும் உள்ளார்.

எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக மட்டும் அவர் இருக்கவில்லை. சமூகத் தொண்டனாகவும், வறியவர்களுக்கு உதவி செய்பவராகவும் இருந்தார்.

எம்.ஜி.ஆரின் பிறந்த தினம், நினைவு நாட்களில் தன்னால் முடிந்தளவுக்கு தனது சொந்த நிதியில், வறியவர்களுக்கு உதவிகளைச் செய்வார்.

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு சந்தைப் பகுதியில் எம்.ஜி. ஆருக்கு சிலையும் வைத்துள்ளார்.

நினைவு நாள் மற்றும் பிறந்தநாளுக்கு தீபங்கள் ஏற்றி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.