தமிழ் ஓசை
தமிழ் ஓசை

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முறுகல் நிலை

0 454

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்ட பேரணி யாழ். மாவட்ட செயலகத்தில் இருந்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்த போது அங்கு அரசாங்கத்துக்கு ஆதரவாக குழுவொன்று செயற்பட்ட நிலையில் முறுகல் நிலை ஏற்பட்டு கைகலப்பும் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தில் சிலர் காயமடைந்துள்ள நிலையில் அப்பகுதியில் பதற்றத்தை தணிப்பதற்காக பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

போராட்டத்தை குழப்பவந்த நபரை பொதுமக்கள் விரட்டி விரட்டி தாக்கியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர உமாச் சந்திர பிரகாஷ் உள்ளிட்ட கட்சியின் அமைப்பாளர்கள் ஆதரவாளர்கள் பலரும் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.