தமிழ் ஓசை
தமிழ் ஓசை

யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

0 238

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று காலை 9.30 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

வலிந்து காணாமல்போனோருக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே நீதியைத் தா போன்ற பல்வேறு கோஷங்கள் இதன்போது எழுப்பப்பட்டன.

ஒவ்வொரு மாதமும் 30ஆம் திகதி  வலிந்து காணாமல் போனோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது .

போராட்டம் நடைபெற்ற பகுதியில் பொலிஸாரும் புலனாய்வுப்பிரிவினரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.