தமிழ் ஓசை
தமிழ் ஓசை

யாழில் 5 இடங்களில் தங்க நகைகளைத் திருடிய 4 பேர் கைது

0 48

யாழ்ப்பாணத்தில் வீதியில் சென்றவர்களின் தங்க நகைகளை அபகரித்துச் சென்ற நால்வர் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை, அச்சுவேலி, சுன்னாகம் உட்பட 5 இடங்களில் வீதியில் பயணித்தவர்களிடம் தங்க நகைகளை அறுத்து அபகரித்துச் சென்ற தெல்லிப்பழை மற்றும் ஏழாலையைச் சேர்ந்த 20 – 25 வயதுடைய 4 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து நகைகளைக் கொள்வனவு செய்த சுன்னாகத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளர் ஒருவர் 6  பவுண் நிறையுடைய 5 சங்கிலிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வழிப்பறிக்குப் பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.